சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

ஆந்திராவில் ரூ.4.4 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரூ.4.4 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2016, 7:47 am

PTI


மச்சிலிப்பட்டினம்: ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரூ.4.4 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வீடு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், ஒரு பையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பிடிபட்டன.

அவற்றின் மதிப்பு ரூ.4.4 லட்சம் என்றும், அதனை பதுக்கி வைத்திருந்த 4 பேரை கைது செய்திருப்பதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள், பழைய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டு புதிய ரூபாய் நோட்டுகளை கொடுக்கும் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.