ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அதிமுக பொதுச் செயலராக பொறுப்பேற்க உள்ளார் சசிகலா: அதே காட்சி; வேறு நபர்

அதிமுக பொதுச் செயலராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா, இன்னும் சற்று நேரத்தில் பொறுப்பேற்க உள்ளார்.

News image
Updated On :31 டிசம்பர் 2016, 6:46 am

DIN


சென்னை: அதிமுக பொதுச் செயலராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா, இன்னும் சற்று நேரத்தில் பொறுப்பேற்க உள்ளார்.

இதற்காக, சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து அதிமுக தலைமையகத்துக்கு சசிகலா புறப்பட்டார். போயஸ் தோட்டத்தில் இருந்து அதிமுக தலைமையகம் வரை போக்குவரத்து முடக்கப்பட்டு, ஏராளமான கட்சி வாகனங்கள் பின்னணியில் சசிகலாவின் வாகனம் வந்தது.

வாகனத்தின் முன் இருக்கையில் சசிகலா அமர்ந்து கொண்டு, வழி நெடுக காத்திருந்த அதிமுக தொண்டர்களுக்கு வணக்கம் கூறியபடி வந்தார்.

அதிமுக பொதுச் செயலராக இந்த ஜெயலலிதா, முதல்வர் பதவியேற்க வந்த காட்சியையே இது நினைவூட்டியது. காட்சி இதேதான். ஆனால், வாகனத்தில் அமர்ந்திருந்த நபர் தான் வேறொருவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.