/

டிஜிட்டல் ரதம் மூலம் தமிழக மக்களை சந்தியுங்கள்: அமித் ஷா

தேர்தல் வரவிருக்கும் நிலையில் மத்திய அரசின் சாதனைகளை டிஜிட்டல் ரதம் மூலம் தமிழக மக்களுக்கு எடுத்துச் செல்லுங்கள் என பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கூறினார்.

Updated On :4 பிப்ரவரி 2016, 3:54 pm

தேர்தல் வரவிருக்கும் நிலையில் மத்திய அரசின் சாதனைகளை டிஜிட்டல் ரதம் மூலம் தமிழக மக்களுக்கு எடுத்துச் செல்லுங்கள் என பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கூறினார்.

பாரதீய ஜனதா கட்சியின் தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று கொச்சியில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அரசின் சாதனைகளை டிஜிட்டல் ரதம் மூலம் தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் யாத்திரை நடத்துங்கள் என்றார். இதன் மூலமே நமக்குத் தேவையான முடிவு கிடைக்கும் என்றார் அமித் ஷா.

இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், எல்.கணேசன், தேசிய செயலர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.