தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ரயில் தடம்புரண்ட சம்பவம்: நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்

கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு செல்லும் விரைவு ரயில் தடம்புரண்ட சம்பவத்தில், நூலிழையில் பயணிகள் உயிர் தப்பியதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News image
Updated On :5 பிப்ரவரி 2016, 8:21 am

கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு செல்லும் விரைவு ரயில் தடம்புரண்ட சம்பவத்தில், நூலிழையில் பயணிகள் உயிர் தப்பியதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரியிலிருந்து ஈரோடு வழியாக பெங்களூரு செல்லும் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (T.No 16525),  வேலூா் மாவட்டம்  திருப்பத்தூர் அருகே உள்ள  சோமநயக்கன்பட்டி-தச்சூர் என்ற இடத்தில் இன்று காலை 4.15 மணியளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 11 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் சிக்கிய ரயிலில் பயணம் செய்த பயணிகள் பேருந்துகள் மூலம் பெங்களூரு அனுப்பி வக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் இருந்து ரயில் பெட்டிகள் தடம்புரண்டு மிகப்பெரிய விபத்து நேரிட்டும், நூலிழையில் பயணிகள் உயிர் தப்பியுள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.