தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கிரிக்கெட்டின் எதிர்காலம் கிராமப்புற மாணவர்களிடம்தான்: இந்திய கிரிக்கெட் வீரர் லட்சுமிபதிபாலாஜி

உலகளவில் வெற்றி பெற்றவர்கள் கிராமத்தில் இருந்து வந்தவர்கள்தான். கிரிக்கெட்டின் எதிர்காலம் கிராமப்புற மாணவர்களிடம்தான் உள்ளது என இந்திய கிரிக்கெட் வீரர் லட்சுமிபதிபாலாஜி குறிப்பிட்டார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2016, 8:57 am

ஷேக் அப்துல்காதர்

உலகளவில் வெற்றி பெற்றவர்கள் கிராமத்தில் இருந்து வந்தவர்கள்தான். கிரிக்கெட்டின் எதிர்காலம் கிராமப்புற மாணவர்களிடம்தான் உள்ளது என இந்திய கிரிக்கெட் வீரர் லட்சுமிபதிபாலாஜி குறிப்பிட்டார்.

இந்திய அணி கிரிக்கெட் வீரர் லட்சுமிபதிபாலாஜி சனிக்கிழமை பாளையங்கோட்டை புஷ்பலதா மெட்ரிக் பள்ளியின் 30 ஆவது விளையாட்டு விழாவில் பங்கேற்க சனிக்கிழமை திருநெல்வேலிக்கு வந்தார். பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடல்  மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
முன்னதாக அவர் அளித்தப் பேட்டி: கிராமங்கள் வளர்ச்சி பெற்றால்தான், நாடு வளர்ச்சி பெறும். அந்த வகையில் திருநெல்வேலி மண்ணுக்கு பெருமை உண்டு. விளையாட்டில் கிராமப்புற மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். கிராமப்புற மாணவர்களிடம் திறமை அதிகம் உள்ளது.

நாம் தேர்வு செய்த துறையில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் வெற்றி எளிதில் கிடைக்கும்.  உலகளவில் விளையாட்டில் மாணவர்கள் கோலோச்ச வேண்டும். கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின்டெண்டுல்கர் கிராமத்தில் இருந்து வந்தவர் தான்.

கனவு, லட்சியத்தை நோக்கி செல்ல வேண்டும். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் ஒரு விஞ்ஞானியாக, குடியரசுத் தலைவராக நாட்டுக்கு பெருமை சேர்த்தார். அப்துல்கலாமை மாணவர்கள் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும். விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஆர்வமுடன் ஈடுபடும் மாணவர்களை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். சிறந்த பயிற்சி, உத்வேகத்துடன் முயற்சி மேற்கொண்டால் கிரிக்கெட்டில் சாதிக்க முடியும். எதிர்காலத்தில் கிரிக்கெட், கிராமப்புற மாணவர்கள் கையில்தான் உள்ளது. எனவே அதற்கேற்ற சூழலை உருவாக்க வேண்டும். என்னை போன்ற விளையாட்டு வீரர்கள்
கிராமப்புற மாணவர்களை சந்திக்க வேண்டும். அப்போதுதான் புதிய வீரர்களை இங்கிருந்து உருவாக்க முடியும். மாணவர்களிடம் உத்வேகம் ஏற்படும்.

இந்திய ஏ அணியில் விளையாடி வரும் திருநெல்வேலியை சேர்ந்த விஜய்சங்கர், தூத்துக்குடியை சேர்ந்த அஸ்வின் கிரைஸ்ட் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். எதிர்காலத்தில் இருவரும் இந்திய அணியில் சிறப்பாக விளையாடுவார்கள். அந்த வகையில் கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அவரவர் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் வெற்றி தேடி வரும். கிராமங்களில்
விளையாட்டுக்கு தேவையான உட்கட்டமைப்பு மேம்படுத்த வேண்டும் என்றார் அவர். பேட்டியின்போது,  பள்ளியின் தாளாளர் புஷ்பலதா பூரணன் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.