தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நெல்லையில் அரசு ஊழியர்கள் போராட்டம்: பொதுமக்கள் பாதிப்பு

நெல்லையில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பல்வேறு அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

News image
Updated On :16 பிப்ரவரி 2016, 11:56 am

ஷேக் அப்துல்காதர்

நெல்லையில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பல்வேறு அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டு,  பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் இயங்கி வரும் ஆய்வகங்களில் பணி செய்துவரும் தொழில்நுட்பர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகளுக்கு ரத்தம் பரிசோதனை செய்தல், மருத்துவம் பயிலும் பயிற்சி மருத்துவர்களின் பயிற்சி ஆகியன பாதிக்கப்பட்டன.

வருவாய்த்துறை பணியாளர்களின் போராட்டத்தினால் பொதுமக்கள் சான்றுகள் பெற முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

உண்ணாவிரதம்

வணிகவரித்துறை பணியாளர்கள், அலுவலர்கள், துணை ஆணையர், உதவி ஆணையர்கள் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாளையங்கோட்டையில் உள்ள வணிகவரித்துறை தலைமை அலுவலகம் முன்பு 6 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதத்தில் 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.