மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் பிப்.22-ல் மாசி தெப்பத் தேரோட்டம் தொடக்கம்

News image
Updated On :17 பிப்ரவரி 2016, 3:04 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலுக்குச் சொந்தமான திருமுக்குளத்தில் பிப்ரவரி 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தினமும் இரவு தெப்பத் தேரோட்டம் நடைபெறுகிறது.

இதற்கான முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை திருமுக்குளம் மேற்குக் கரையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன், பட்டர்கள் அ.சுதர்ஸன், ஸ்தானிகம் ரெங்கராஜன் (எ) ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

2012-ம் ஆண்டு தெப்பத் தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் வறட்சி காரணமாக தெப்பத்தில் நீர் இல்லாததால் தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு நடைபெறுகிறது. தினமும் இரவு 7 மணியளவில் தேரோட்டம் நடைபெறும். இதனை ஏராளமான பக்தர்கள் காண வருவார்கள் என்பதால் காவல் துணைக் கண்காணிப்பாளர் வேணுகோபால், நகர் காவல் ஆய்வாளர் ஜே.மகேஸ்குமார் ஆகியோர் தலைமையில் போலீஸார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.