தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கூடன்குளத்தில் 3, 4 ஆவது அணு உலை பணிகள் தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், கூடன்குளத்தில் 3 மற்றும் 4 ஆவது அணு உலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 பிப்ரவரி 2016, 10:30 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், கூடன்குளத்தில் 3 மற்றும் 4 ஆவது அணு உலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

இந்தியா - ரஷ்யாவுடன் இணைந்து கூடன்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் 4 அணுஉலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி அங்கு முதல் அணுஉலை நிறுவப்பட்டு கடந்த 2013 இல் அக்டோபர் மாதம் 22 இல் மின் உற்பத்தி தொடங்கியது. இங்கு உற்பத்தி செய்யும் மின்சாரம் மத்திய தொகுப்பில் இணைக்கப்பட்டது. பின்னர் 2014 இல் ஜூன் 7 இல் முதல் அணு உலையில் முழு உற்பத்தித் திறன் 1000 மெகாவாட்டை எட்டியது.

முதல் அணுஉலையில் பராமரிப்பு பணிகளுக்காக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. கிரிட்டிகாலிட்டி எனும் அணுப்பிளவு சோதனை மேற்கொள்ளப்பட்டது. 7 மாதங்களுக்கு பிறகு கடந்த ஜன. 30 இல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. எனினும் நீராவி கசிவு காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இம்மாதம் 14 ஆம் தேதி மின் உற்பத்தி தொடங்கிய நிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் நிறுத்தப்பட்டது.

2 ஆவது அணுஉலையின் பணிகள் முடிவடைந்த நிலையில் அடுத்த சில மாதங்களில் மின் உற்பத்தி தொடங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டன. இதனிடையே 3 ஆவது மற்றும் 4 ஆவது அணுஉலைகளுக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

இதில் அணுஉலை திட்ட இயக்குநர் டி.ஏ. பிள்ளை, வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.