மனிதநேய ஜனநாயக கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளோம் என்றார் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தமீமுன் அன்சாரி.
மனிதநேய மக்கள் கட்சியில் பொதுச் செயலாளராக இருந்து, அந்தக் கட்சியில் இருந்து பிரிந்த தமீமுன் அன்சாரி மற்றும் அவரது ஆதரவாளர்களின் செயற்குழுக் கூட்டம் கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்தப் பேட்டி:
கடந்த 7 ஆண்டுளாக மனிதநேய மக்கள் கட்சியில் இருந்தோம். கடந்த ஆண்டு கட்சி பிளவுபட்ட நிலையில், கட்சி எங்களுக்கே சொந்தம் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். ஆனால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, எங்களின் ஆதரவு மாவட்டச் செயலாளர்களை கும்பகோணத்தில் இன்று கூட்டி ஆலோசனை நடத்தினோம்.
இந்தக் கூட்டத்தில், தொடர்ந்து அரசியலில் பயணிப்பது, புதிய கட்சி தொடங்குவது, தமிழகத்தில் நேர்மையான சிறப்பான கொள்கைகளுடன் புதிய பாதையில் பயணத்தை மேற்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவை பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டதையடுத்து, மனிதநேய ஜனநாயக கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்குவது எனவும் முடிவு செய்துள்ளோம்.
மஜக தமிழகத்தில் நம்பிக்கைக்குரிய நேர்மையான அரசியலை முன்னெடுக்கும் வகையில் கொள்கை திட்டங்களை வகுத்து, வரும் சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்திக்கும்.
கட்சிக் கொடி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் கொடி அறிமுகப்படுத்தப்படும்.
மஜக-வின் தொடக்க விழா மாநாட்டை சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேதி இன்று நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப்படும். மாவட்ட பொறுப்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.
வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்தக்கூடிய வலுவான கூட்டணியில் நாங்கள் இடம்பெறுவோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூழமந்தல் விநாயகா் கோயிலில் அக்னி பகவானுக்கு சிறப்பு பூஜை

விஜய்யுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற அந்த இருவர் யார்?

ஸ்விக்கி 4வது காலாண்டு இழப்பு ரூ. 800 கோடியாக குறைவு!

அஸ்ஸாமின் புதிய பாஜக முதல்வர் யார்? மே 10-ல் தேர்வு!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

