சுவாதி கொலை வழக்கு: தமிழக காவல் துறைக்கு அரசுப் பணியாளர்கள் சங்கம் பாராட்டு
மென் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் மிக துரிதமாக, இரவு பகல் பாராது உழைத்து குற்றவாளியைக் கைது...


ஸ்ரீவில்லிபுத்தூர்: மென் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் மிக துரிதமாக, இரவு பகல் பாராது உழைத்து குற்றவாளியைக் கைது செய்த தமிழக காவல் துறைக்கும், இதனை வழிநடத்திச் செல்லும் தமிழக முதல்வருக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாவட்டத் தலைவரும், தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவருமான ஆ.காமராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மென் பொறியாளர் சுவாதியை படுகொலை செய்த வழக்கில் குற்றவாளியை தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் உத்தரவுபடி, மிகத் துரிதமாக துப்புத்துலக்கி கண்டுபிடித்து கைது செய்த தமிழக காவல் துறைக்கு சங்கம் சார்பில் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக பேணி பராமரித்து நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவற்றை அடியோடு தடுத்து நிறுத்தியுள்ள தமிழக காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு சங்கம் பாராட்டு தெரிவிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...