முதல்வரை அவதூறாகப் பேசிய வழக்கு: சந்திரகுமார் நீதிமன்றத்தில் ஆஜர்
ஸ்ரீவில்லிபுத்தூர்.தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கு விசாரணைக்கு...


ஸ்ரீவில்லிபுத்தூர்.தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கு விசாரணைக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மக்கள் தே.மு.தி.க. நிறுவனர் சந்திரகுமார் வியாழக்கிழமை ஆஜரானார்.
ராஜபாளையம், ஜவஹர் மைதானத்தில் 6.1.2013-ம் தேதி நடைபெற்ற தே.மு.தி.க. பொதுக் கூட்டத்தில் அப்போதைய அக் கட்சி எம்.எல்.ஏ. சந்திரகுமார், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு கலங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறாகப் பேசியதாக, அரசு தரப்பு வழக்குரைஞர் அ.மங்களசாமி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கு விசாரணைக்கு சந்திரகுமார், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ரா.தாரணி முன்னிலையில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.பின்னர் சந்திரகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 3 மாதங்களாக என்னுடைய செல்லிடை பேசிக்கு ஆபசமான பேச்சுக்கள் வந்தன.
கடந்த 5 நாட்களாக கொலை மிரட்டல் வருகிறது. எனக்கு தனிப்பட்ட, அரசியல் எதிரிகள் கிடையாது. தே.மு.தி.க. வினர் என்னை எதிரியாகப் பார்க்கிறார்கள். இது குறித்து ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் புகார் கொடு்ததுள்ளேன். மேலும் காவல் துறைத் தலைவருக்கும் புகார் அனுப்பியுள்னேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...