சென்னை டபிள்யூ2 டெக்னாலஜியுடன் கலசலிங்கம் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்
டபிள்யூ2 டெக்னாலஜி நிறுவனமும், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.


டபிள்யூ2 டெக்னாலஜி நிறுவனமும், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
இதற்கான விழா சனிக்கிழமை பல்கலைக்கழகத்தில் வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. துணை வேந்தர் ச.சரவணசங்கர் வரவேற்றார்.
கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் டபிள்யூ2 டெக்னாலஜியின் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தை அமைப்பது. இந் நிறுவனத்தின் புராஜக்ட் குறித்த பயிற்சி மற்றும் மாணவர்கள் செய்ய வேண்டிய புராஜக்ட்களுக்கு ஆலோசனை வழங்குவது குறித்தும் ஒப்பந்தம் ஏற்பட்டது.
மேலும் பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வதேச ஆராய்ச்சி மையத்தில் டபிள்யூ2 டெக்னாலஜியின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் எஸ்.சசி ஆனந்த் மற்றும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராமையா சிதம்பரம் ஆகியோர் கையொப்பமிட்டனர்.
நிகழ்ச்சியில் பதிவாளர் வெ.வாசுதேவன், இ.சி.இ. துறைத் தலைவர் பள்ளிகொண்ட ராஜசேகர், பேராசிரியர்கள் திலகராஜ், வேல்முருகன், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறை அலுவலர் அலாவுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...