சென்னை: காணாமல் போயியுள்ள திரைப்படத் தயாரிப்பாளர் மதனைத் தொடர்ந்து தேடுமாறு போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேந்தர் மூவீஸ் தயாரிப்பாளர் எஸ்.மதன் கடந்த மாத இறுதியிலிருந்து காணாமல் போய்விட்டார். கங்கையில் சமாதி அடையச் செல்வதாக வாட்ஸ் அப் மூலம் செய்தி அனுப்பிருந்தார்.
இந்நிலையில் காணாமல் போன தனது மகனை கண்டுப்பிடித்து தருமாறு மதனின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்ததது.
மதன் தாயார் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த மே 27 ஆம் தேதி தில்லி சென்ற தனது மகன் திரும்பி வரவேவில்லை. இதுகுறித்து காவல் துறையில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தனது மகனை கண்டுப்பிடித்து தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
விசாரணையின் போது அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்குரைஞர், மதன் தாயார் அளித்த புகார் குறித்து ஜூன் முதலாம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அதுதவிர மதன் மீது பல்வேறு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர் என்றும் கூறினார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை வருகிற 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதேநேரத்தில் மதனை தொடர்ந்து தேடுவதற்கு போலீஸாருக்கு உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK

தற்கொலை எண்ணத்தில் இருந்தேன்: ரத்னகுமார்

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


