தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் இந்திய மருத்துவத்துறை ஆணையர் ஆய்வு

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை ஆணையர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

News image
Updated On :7 ஜூன் 2016, 10:50 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி:  திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை ஆணையர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் சென்னை, திருநெல்வேலியில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. திருநெல்வேலி சித்த மருத்துவக் கல்லுாரியில் ஆண்டுதோறும் இளங்கலை பிரிவில் 100 மாணவர்கள், முதுகலை பிரிவில் 50 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் போதிய உட்கட்டமைப்புகள் இன்றி சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், பயின்று வரும் மாணவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இக்கல்லூரியில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் கல்லூரியில் மேற்கொள்ள வேண்டிய கட்டமைப்பு பணிகள் குறித்து செவ்வாய்க்கிழமை இங்கு வருகை தந்த இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை ஆணையர் மோகன் பியாரே ஆட்சியர், மாணவர்கள், கல்லூரி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

கல்லூரியில் மாணவர், மாணவிகள் தங்கும் விடுதி, வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவு, மாணவர்கள் பயிலும் வகுப்பறை போன்றவற்றை மோகன் பியாரே ஆய்வு மேற்கொண்டார்.

மாணவர்களிடம் கல்லூரியில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது மாணவர் விடுதியில் தளவாடப் பொருட்கள் சேதமடைந்து

இருப்பது குறித்து ஆணையரிடம் தெரிவித்தனர்.

ஆய்வின்போது, ஆட்சியர் மு. கருணாகரன், கல்லூரி முதல்வர் விக்டோரியா, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாணிக்கத்தாய், திருநெல்வேலி கோட்டாட்சியர் பி. பெர்மிவித்யா, கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

அப்போது இந்திய மருத்துவத்துறை ஆணையர் கூறியது: சித்த மருத்துவக் கல்லூரியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள், கட்டமைப்பை மேம்படுத்துதல் குறித்து கல்லூரி மாணவர்கள், முதல்வர், அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்படும். அதன் அடிப்படையில் அரசுக்கு அறிக்கை அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.