பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

பி.ஏ.சங்மா மறைவு: ஆளுநர் - முதல்வர் இரங்கல்

மூத்த அரசியல்வாதியும், மக்களவை முன்னாள் தலைவருமான பி.ஏ.சங்மா மறைவுக்கு ஆளுநர், முதல்வர் ஆகியோர் வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவித்தனர்.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

மூத்த அரசியல்வாதியும், மக்களவை முன்னாள் தலைவருமான பி.ஏ.சங்மா மறைவுக்கு ஆளுநர், முதல்வர் ஆகியோர் வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவித்தனர்.
 ஆளுநர் கே.ரோசய்யா: மக்களவை முன்னாள் தலைவர் பி.ஏ.சங்மாவின் திடீர் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். சிறந்த நிர்வாகியாகவும், மிகச் சிறந்த நாடாளுமன்ற வாதியாகவும் இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினராக எட்டு முறைக்கு மேல் இருந்தார். மேகாலயா மாநில மக்களின் உயர்வுக்காக தனது வாழ்நாள்களை அர்ப்பணித்தார்.
 அவரது இழப்பு அந்த மாநில மக்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த தேசத்துக்கே பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 முதல்வர் ஜெயலலிதா: மூத்த அரசியல்வாதியும், சிறந்த நாடாளுமன்றவாதியுமான சங்மா மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் மக்களவைத் தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் பல்வேறு துறைகளில் பொறுப்பு வகித்து சிறப்பாக பணியாற்றியவர். அவரது சீரிய பண்பால் அனைத்துத் தரப்பினரிடமும் அரசியல் தடைகளை மீறி நன்மதிப்பை பெற்றிருந்தார். அவரது பணி என்றென்றும் போற்றத்தக்கதாக இருக்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதி பெற வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.