மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

மக்களவை முன்னாள் தலைவர் பி.ஏ. சங்மா மறைவுக்கு அன்புமணி இரங்கல்

மக்களவை முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பி.ஏ. சங்மா உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வருத்தமும், துயரமும் அடைந்தேன் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

மக்களவை முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பி.ஏ. சங்மா உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வருத்தமும், துயரமும் அடைந்தேன் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், இந்தியாவின் நாகரீகமான, முதிர்ச்சி நிறைந்த அரசியல் தலைவர்களில் பி.ஏ. சங்மா முக்கியமானவர். மேகாலயா மாநில முதலமைச்சராக சிறப்பாக பணியாற்றியவர். 8 முறை மக்களவை உறுப்பினராக செயல்பட்டிருக்கிறார். 1996 முதல் 1998 வரை மிகவும் சிக்கலான கால கட்டத்தில் ஆளும் கூட்டணியை சாராத மக்களவைத் தலைவராக செயல்பட்டவர். ஒரு மக்களவைத் தலைவர் எவ்வாறு நடுநிலையாக செயல்பட வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர். அதற்குப் பிறகு வந்த மக்களவைத் தலைவர்கள் அனைவருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

பி.ஏ.சங்மா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தேசிய மக்கள் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.