பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

கட்சி சார்பான அரசு ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது

அரசு ஊழியர்களில் கட்சி சார்பானவர்களை இனம் கண்டு, அவர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதைத் தடை செய்ய வேண்டும் என

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

அரசு ஊழியர்களில் கட்சி சார்பானவர்களை இனம் கண்டு, அவர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதைத் தடை செய்ய வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
 சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற எழுத்தாளர் ம.வெங்கடேசனின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில், பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
 தமிழகத் தேர்தலை ஒட்டு மொத்த இந்தியாவும் ஆர்வத்துடன் கவனிக்கிறது.
 ஒரு தடவைக்கு மேல் பெயர் இருந்தவர்கள், இறந்தவர்கள் என சுமார் 7 லட்சம் வாக்காளர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர். போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து முழுமையாக நீக்க வேண்டும்.
 பண விநியோகத்தைத் தடுக்க வேண்டும்: வாக்குக்கு பண விநியோகம் என்பது மிகப் பெரிய சாபக் கேடாக உள்ளது. பணப்பெட்டிகள் பதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. காவல் துறையும், மாவட்ட நிர்வாகங்களும் விரைந்து நடவடிக்கை எடுத்து பண விநியோகத்தைத் தடுக்க வேண்டும்.
 அரசுக்கு சார்பான காவல்துறை அதிகாரிகளை தேர்தல் பணிகளில் பங்கேற்ற அனுமதிக்கக் கூடாது.
 அரசியல் சாயம் பூச வேண்டாம்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தனது துறை சார்ந்தே சென்னைக்கு வந்தார். மத்திய அமைச்சர்கள் இப்படியாக சென்னைக்கு வந்து செல்வது இயல்பானதாகும். இதற்கு அரசியல் சாயம் பூசக் கூடாது.
 இளைஞர்களுக்கு நம்பிக்கை: இளைஞர்கள் பாஜக மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர். கட்சியில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. இந்தத் தேர்தலில் மிகப் பெரிய சக்தியாக தமிழக பாஜக உருவெடுக்கும். 1991ஆம் ஆண்டு தேர்தலில் இருந்தே பாஜக வாக்கு வங்கி தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
 திமுகவுடன் தேமுதிக கூட்டணியா? திமுகவும், தேமுதிகவும் கூட்டணி அறிவிப்பு வரும்போது பார்த்துக் கொள்ளலாம். பாஜக கூட்டணியில் இன்னமும் தேமுதிக உள்ளதா என்பதை தேமுதிகதான் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.