
தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மீனவர் பிரச்னைக்கு மே மாதத்துக்குள் தீர்வு காணப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறினார்.
இந்தச் சூழலில் மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இனியும், காலம் தாழ்த்தாமல் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






