பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

நீலகிரி மலை ரயில் என்ஜினில் கோளாறு: நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள்

கோவை மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

Updated On :17 மார்ச் 2016, 8:58 am

கோவை மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நீலகிரி மலை ரயில் இன்று காலை 7.10 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 170 பயணிகளுடன் புறப்பட்டது. குன்னூர் ரயில் நிலையத்துக்கு அரை கிலோ மீட்டர் தூரமே இருந்த நிலையில், ரயில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மலை ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

இதனால், பாதி வழியிலேயே ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட பயணிகள் அனைவரும் நடந்தே குன்னூர் ரயில் நிலையத்துக்குச் சென்றனர்.

மற்றொரு என்ஜினை எடுத்துச் சென்று ரயிலை குன்னூர் ரயில் நிலையத்துக்கு இழுத்து வருவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.