வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

இறுதிக் காலம் இனிமையாக அமைய..!

தீர்க்க முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டு இறுதிக் காலத்தை எண்ணிக் கொண்டிருப்போருக்கு சென்னை வலி, நோய்த் தணிப்பு சேவை மையம் வழிகாட்டி வருகிறது.

News image
Updated On :30 மார்ச் 2016, 7:53 pm

தீர்க்க முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டு இறுதிக் காலத்தை எண்ணிக் கொண்டிருப்போருக்கு சென்னை வலி, நோய்த் தணிப்பு சேவை மையம் வழிகாட்டி வருகிறது.
 புற்றுநோய் போன்ற தீர்க்க முடியாத நோய்களால் பாதிக்கப்படுவோர் ("பங்ழ்ம்ண்ய்ஹப்ப்ஹ் ஐப்ப் டஹற்ண்ங்ய்ற்ள்') ஒரு கட்டத்தில் மருத்துவர்களால் கைவிடப்படுவர். வாழ்நாளை எண்ணிக் கொண்டுள்ள இவர்கள் ஒவ்வொரு நாளும் நரக வேதனையைதான் அனுபவிப்பர். இவர்களை முறையாகப் பராமரிக்கும் வகையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9-இல் "சென்னை வலி மற்றும் நோய்த் தணிப்பு சேவை மையம்' உருவாக்கப்பட்டது.
 சென்னையை 29 பகுதிகளாகப் பிரித்து நூற்றுக்கணக்கான நோயாளிகளை இந்த மையம் பராமரித்து வருகிறது. குணப்படுத்த முடியாத நோயாளிகள் உடல், உளவியல் ரீதியாகவும் பல பிரச்னைகளுக்குள்ளாகிறார்கள். நோயின் துன்பங்கள் ஒரு பக்கம் என்றால், மருத்துவ, குடும்பச் செலவுகளும் அவர்களை மிகவும் பாதிக்கின்றன.
 இதனால் மனச் சமநிலை குழம்பிப் போயுள்ள அவர்களுக்கு மையம் வழிகாட்டி வருகிறது.
 அன்பாகப் பேசி ஆறுதல் கூறலாம்..!
 இதுதொடர்பாக மைய இணைப்பாளர் ப்ரீத்தா மகேஷ் கூறியதாவது:-
 நோயாளிகளுடன் நேரம் செலவு செய்து அன்பான வார்த்தைகளைப் பேசுவதன் மூலமாக, அவர்களை மனச் சமநிலையுடன் இருக்கச் செய்வதே மையத்தின் நோக்கமாகும்.
 வீட்டில் வைத்துப் பராமரிக்கும் குடும்ப உறுப்பினர்களே சிறிது காலத்தின் பிறகு சலிப்படைந்து விடுகிறார்கள். நோயின் உளவியல் தாக்கங்கள் ஒன்று சேர்வதால் சில தருணங்களில் குழந்தைகள் போன்று அவர்கள் நடந்துகொள்வர். அன்பாகப் பேசுவதன் மூலமாக ஆறுதல்படுத்தலாம்.
 வேளச்சேரியில் ஒருவரை பராமரித்தோம். கோடிக்கணக்கான சொத்து வைத்துள்ள அவருக்கு அன்பான வார்த்தைகள் பேசும் ஒருவர்தான் கடைசிக் காலத்தில் தேவைப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டோம் என்றார்.
 இதுதொடர்பாக மைய ஆலோசகர் பி.டி.அலி கூறியதாவது:-
 வீட்டுச் சிறையில்தான் அவர்களை வெளியில் அழைத்துச் செல்வதே அரிதான ஒன்றாகும். விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்கிறோம் என்றார்.
 இதுகுறித்து தன்னார்வலர் ஷாலினி கூறியதாவது:-
 நோயாளிகளுடன் அன்பாகப் பேசுவதால், அவர்களின் இறுதிக் காலத்தை மகிழ்ச்சிக்குரியதாக்கலாம். நோய்களைக் குணப்படுத்த முடியாது. ஆனால், ஆறுதல் வார்த்தைகளும், அவர்களுடன் செலவழிக்கும் தருணங்களும் இறுதிக் காலத்தை நிம்மதியானதாக்கும். "மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என்பதற்கேற்ப, நோயாளிகளுக்கு சேவை செய்கிறோம் என்றார்.
வலி நிவாரண மையங்கள் அதிகரிக்கப்படுமா?
 சென்னையில் மட்டுமுள்ள வலி நிவாரண மையத்தை, தமிழகத்தில் உள்ள பிற நகரங்களிலும் ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தீர்க்க முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டு இறுதி நாள்களை எண்ணுவோரின் நலனுக்காக செயல்படும் "வலி நிவாரண மையங்கள்' கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் செயல்பட்டு வருகின்றன. நோயாளிகளுக்கு மன நலனையும், மன மகிழ்வையும் அளிக்கின்றன.
 ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட மலப்புரம் நகரத்தில் சுமார் 30 மையங்கள் உள்ளன. ஆனால், ஏறத்தாழ 50 லட்சம் பேர் வசிக்கும் சென்னையில் ஒரே ஒரு வலி நிவாரண மையமே உள்ளது என்பது துரதிர்ஷ்டவசமானது.
 கேரளத்தைப் போன்று தமிழகத்திலும் வலி நிவாரண மையங்களை அதிக அளவில் அமைத்து வலி நிவாரணத்துக்கு உதவ வேண்டும் என்பதே மருத்துவத் துறையினரின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.