சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சிவகாசி அருகே டிரைவரை கல்தூணில் கட்டிவைத்து தாக்கிய 4 பேர் கைது

சிவகாசி அருகே திரைப்பட பாணியில் டிரைவரை கல்தூணில் கட்டிவைத்து தாகிய 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

Updated On :30 மார்ச் 2016, 6:40 am

சிவகாசி: சிவகாசி அருகே திரைப்பட பாணியில் டிரைவரை கல்தூணில் கட்டிவைத்து தாகிய 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

சிவகாசி அருகே சோரம்பட்டியைச் சேர்ந்த அழகர்சாமி மகன் பால்பாண்டி(24).திருமணம் ஆகாத இவர் ஒரு பட்டாசு ஆலையில் வேன்டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் ராமச்சந்திராபுரம் செந்தூரான்(33) மனைவி பட்டாசுத்தொழிலாளி ராஜாத்திக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாம். இந்த விஷயம் செந்தூரானுக்கு தெரியவர ராஜாத்தியை வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறிவிட்டார்.

எனினும் ராஜாத்தியும் , பால்பாண்டியும் செல்லிடை பேசிமூலம் பேசிவந்தார்களாம்.

இதனால் ஆத்திரம் அடைந்த செந்தூரன் மற்றும் அவரது நண்பர்களான காளிமுத்து(35), சின்னமாரி(24), தர்மலிங்கம்(23) ஆகிய நான்கு பேரும், சோரம்பட்டி சென்று பால்பாண்டியை தாக்கி, ராமச்சந்திராபுரம் கொண்டு வந்தார்களாம்.

பின்னர் அங்கு தெருவில் உள்ள ஒரு கல்தூணில் பால்பாண்டியை கட்டிவைத்து கம்பால் தாக்கினார்களாம்.

இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் சென்று பால்பாண்டியை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் எம்.புதுப்பெட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தி எதிரிகளான 4 பேரையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.