அஇஅதிமுக வேட்பாளரை ஆதரித்து சமக மாநில தலைவர் பிரசாரம்
விராலிமலை சட்டப்பேரைத் தொகுதி அதிமுக வேட்பாளரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான சி. விஜயபாஸ்கரை ஆதரித்து சமக மாநில தலைவர்


விராலிமலை: விராலிமலை சட்டப்பேரைத் தொகுதி அதிமுக வேட்பாளரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான சி. விஜயபாஸ்கரை ஆதரித்து சமக மாநில தலைவர் ஆர்.சரத்குமார் விராலிமலை தொகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
விராலிமலை சோதனைச்சாவடி அருகே நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற சமக மாநில தலைவர் ஆர்.சரத்குமார் பேசியது:
தமிழகத்தை பற்றியும் தமிழக மக்களைபற்றியும் சிந்திக்கும் ஒரே தலைவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா மட்டுமே, அதனால் தான் தமிழக மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளார், விவசாய கடன் ரத்து, தாலிக்கு 8 கிராம் தங்கம், அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் கைப்பேசி, 100 யூனிட் வரை மின்சாரத்திற்கு கட்டணம் இல்லை, பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் ஸ்கூட்டர், பொங்கலுக்கு கோஆப்டெக்ஸ்ல் பெருள்கள் வாங்க ரூ. 500 மதிப்பில் கூப்பன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இந்தியவே இன்று திரும்பி பார்க்க வைத்து அனைத்து தரப்பு மக்களின் பாரட்டை பெற்றுள்ளார்.
தமிழகத்தில் எத்தனை பேர் கூட்டு சேர்ந்து வந்தாலும் ஆட்சி அமைக்கும் அத்தனை தகுதியும் கொண்டவர் ஜெயலலிதா மட்டுமே மேலும், விராலிமலை தொகுதியை தமிழகத்தின் முன் மாதிரியான தொகுதியாக ஆக்கிய பெருமை விஜயபாஸ்கருக்கு உண்டு இத்தொகுதியின் வளர்ச்சிக்காக சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலங்கள் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் உங்களுடன் இருப்பவர் இவர் மட்டுமே. ஆகவே, வாக்காளபெருமக்களே வரும் தேர்தலில் எம்ஜிஆர் கண்ட வெற்றிச்சின்னமான இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து விஜயபாஸ்கரை பெருவாரியான வாக்குகள் வித்தியசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...