தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நெல்லையில் இந்து மக்கள் கட்சி வேட்பாளர் நூதனப் பிரசாரம்!

திருநெல்வேலியில் சனிக்கிழமை தேர்தல் ஆணையத்தை கண்டித்து இந்து மக்கள் கட்சி வேட்பாளர் வாயில் கறுப்புத் துணி கட்டி வாக்குசேகரித்தார்.

News image
Updated On :14 மே 2016, 7:48 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் சனிக்கிழமை தேர்தல் ஆணையத்தை கண்டித்து இந்து மக்கள் கட்சி வேட்பாளர் வாயில் கறுப்புத் துணி கட்டி வாக்குசேகரித்தார்.

இந்து மக்கள் கட்சி சார்பில் திருநெல்வேலி பேரவைத் தொகுதியில் அக்கட்சியின் மாவட்டத்தலைவர் எஸ். உடையார் போட்டியிடுகிறார். சட்டப் பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையத்தை கண்டித்து உடையார் தலைமையில் அக்கட்சியினர் நூதனப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி நகரம் நெல்லையப்பர் கோயில் முன்பு கட்சியின் நிர்வாகிகள் கணபதி, ராமராவ் உள்ளிட்டோர் வாயில் கறுப்புத் துணிக் கட்டி அவர்கள் வாக்குசேகரித்தனர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீஸார் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போது போலீஸாருக்கும் இந்து மக்கள் கட்சியினர் இடையே வாக்குவாதம் எழுந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.