சேர்வலாறு, கடனாநதி அணைகள் நீர்மட்டம் உயர்வு
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் சேர்வலாறு, கடனாநதி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பாபநாசம் அணையில் அதிகபட்சமாக 45 மி.மீ மழை பெய்துள்ளது.


திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் சேர்வலாறு, கடனாநதி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பாபநாசம் அணையில் அதிகபட்சமாக 45 மி.மீ மழை பெய்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மிட்டரில்): பாபநாசம் அணை-45, பாபநாசம் கீழ் அணை-24, சேர்வலாறு அணை-23, மணிமுத்தாறு அணை-17.2, கடனாநதி அணை-15, ராமநதி அணை-20, கருப்பாநதி அணை-22, குண்டாறு அணை-33, அடவிநயினார் அணை-17, நம்பியாறு அணை-4, கன்னடியன் அணைக்கட்டு-21, கொடுமுடியாறு அணை-10,
பாளையங்கோட்டை-19, திருநெல்வேலி-7, மூலக்கரைப்பட்டி-17, களக்காடு 11.6, நான்குனேரி-19, ராதாபுரம்-11.2, தென்காசி-18, செங்கோட்டை-39, ஆய்க்குடி-40.8, ஆலங்குளம்-15.6, அம்பாசமுத்திரம்-15.6, சேரன்மகாதேவி-21.6.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 244 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 63, கடனாநதி அணைக்கு விநாடிக்கு 46 கனஅடி, அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 11 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையில் இருந்து 204.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நீர்மட்டம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம்-60.90 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து-74.28 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம்-80.30 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 1.40 அடி உயர்ந்து-29 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம்-25 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம்-24.94 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம்-11.80 அடி,
அடவிநயினார் அணையின் நீர்மட்டம்-43 அடி, வடக்குப்பச்சையாறு அணையின் நீர்மட்டம்-24.45 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம்-12.96 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம்-2.50 அடியாகவும் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...