மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி!

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்லை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை உயர் நீதிமன்ற கிளை  தள்ளுபடி செய்தது.

News image
Updated On :1 நவம்பர் 2016, 10:13 am

மதுரை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்லை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை உயர் நீதிமன்ற கிளை  தள்ளுபடி செய்தது.

பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுக்கு ஆளான வேட்பாளர்களே  மீண்டும் தேர்தலில் நிற்பதால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்லை ஒத்திவைக்க வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.பிரகாஷ், உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு முதலாம் அமர்வில் செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனுவை விசாரிக்க வலியுறுத்தவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கறிஞருக்கு கடுமையான கண்டங்களை தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.