புதுச்சேரி விடுதலை நாள் விழா: முதல்வர் நாராயணசாமி தேசிய கொடியேற்றினார்
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விடுதலை நாள் விழாவில் முதல்வர் நாராயணசாமி தேசிய கொடியேற்றினார்.


புதுச்சேரி: புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விடுதலை நாள் விழாவில் முதல்வர் நாராயணசாமி தேசிய கொடியேற்றினார்.
300 ஆண்டுகள் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து புதுச்சேரி விடுதலை பெற்ற விழா கடற்கரைச் சாலையில் கொண்டாடப்பட்டது. அங்கு நடந்த விழாவில், தேசிய கொடியை ஏற்றி வைத்து நாராயணசாமி அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
ஏறக்குறைய 300 ஆண்டுகளாக பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து வந்த புதுச்சேரிக்கு 1954ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி விடுதலை கிடைத்தது. ஆனால் சுதந்திரதினத்தை மட்டும் புதுச்சேரி அரசு கொண்டாடி வந்தது.
இதனால் புதுச்சேரி விடுதலை நாளை அரசு கொண்டாட வேண்டும் என்று புதுச்சேரி-பிரெஞ்சிந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதையடுத்து நவம்பர் 1ம் தேதி புதுச்சேரி விடுதலை நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் கடந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின் போது முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதன்படி புதுச்சேரி விடுதலை நாள் ஆண்டுதோறும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விடுதலை நாள் விழாவில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.
இதையடுத்து நடைபெற்ற போலீசார் மற்றும் மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்று கொண்டார்.
இதை ஏராளமான பொதுமக்கள் ரசித்து பார்த்தனர். அமைச்சர்கள் ஏ.நமச்சிவாயம், கந்தசாமி, அரசுக் கொறடா ஆர்கே.அனந்தராமன், எம்.எல்.ஏக்கள் தீப்பாயந்தான், தனபால், விஜயவேணி, தலைமைச் செயலாளர் மனோஜ்பரிதா மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் புதுச்சேரி விடுதலை நாள் காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதியிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...