நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நெல்லித்தோப்பு இடைத்தேர்தல்: 17-19ம் தேதி வரை மதுக்கடைகள் மூட உத்தரவு

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வருகிற  17-ந்தேதி மாலை முதல் 19-ந்தேதி மாலை வரை மதுபானகடைகள் மற்றும் சாராயம் - கள் கடைகளை மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :3 நவம்பர் 2016, 8:53 am

சுஜித்குமார்


புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வருகிற  17-ந்தேதி மாலை முதல் 19-ந்தேதி மாலை வரை மதுபானகடைகள் மற்றும் சாராயம் - கள் கடைகளை மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

மீறி கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை ஆணையர் ஆபேல் ரொசாரியோ எச்சரித்துள்ளார்.

புதுச்சேரி மாநில நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் நாராயணசாமியும், அதிமுக சார்பில் ஓம்சக்திசேகர் உள்பட 11 பேர் போட்டியிடுகிறார்கள்.

தேர்தலில் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க பறக்குபடையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் மதுபானம் கடத்தல்களை தடுப்பதற்கான கலால்துறை அதிகாரிகள் 3 பறக்கும்படைகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேர்தல் வாக்குபதிவை முன்னிட்டு 3 நாட்கள் மதுபானகடைகளை மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கலால்துறை துணை ஆணையர் ரொசாரியோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி மாலை 4 மணி முதல் அனைத்து மதுபானகடைகள் மற்றும் சாராயம்-கள் கடைகள் மூடப்படும். இந்த கடைகள் 19-ந்தேதி இரவு 7 மணிக்கு தான் திறக்க வேண்டும்.

இதே போல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 22-ந்தேதி அன்று மாலை 5 மணிக்கு தான் திறக்க வேண்டும் என்றும், இதை மீறி கடை திறப்பவர்கள் மீது கலால்துறை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.