ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வேந்தர் மூவிஸ் மதனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வேந்தர் மூவிஸ் மதனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க  சைதப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :21 நவம்பர் 2016, 3:10 pm

DIN

சென்னை: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வேந்தர் மூவிஸ் மதனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க  சைதப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருபதுக்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியில் படிப்பதற்கு சீட் வாங்கித்தருவதாக கூறி சுமார் தலா 1 கோடியே 25 லட்சம் ரூபாய் வீதம் வாங்கியுள்ளதாகவும், இதேபோல்  வேறு சில கல்லூரிகளில் சீட் வாங்கித்தருவதாக கூறி சுமார் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாகவும் மதன் மீது காவல் துறையில் புகார் கூறப்பட்டது. மதன் உடனே தலைமறைவாகி விட்டார்.

தலைமறைவான மதனை வாரணாசி, ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களில் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். அதன் தொடர்ச்சியாக  திருப்பூரில் வைத்து மதனை தனிப்படை போலீசார் இன்று காலை மடக்கி பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட மதன் எழும்பூர் மத்திய குற்றபிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு வைத்து அவரிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டது.

அதன் பிறகு அவர் பலத்த பாதுகாப்புடன் சைதாப்பேட்டை நீதிமன்றதிற்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் நீதிமன்ற பனி நேரம் முடிந்து விட்டதால், அவர் நீதிபதி பிரகாஷ் இல்லத்தில் ஆஜர் படுத்தப்பட்டர்.    மதனிடம்  மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்ற காவல்துறையினரின் வேண்டுகோளை ஏற்காத நீதிபதி நீதிபதி பிரகாஷ்,கைது செய்யப்பட்டுள்ள மதனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைகாக் உத்தரவிட்டார். பின்னர் வரும் டிசம்பர்-5 ஆம் தேதி மதனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து மதன் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.