ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

காவிரி பிரச்சினையில் மத்திய அரசை கண்டித்து 8-ந்தேதி ஆர்ப்பாட்டம்: ராமதாஸ் அறிவிப்பு!

காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்த மத்திய அரசைக் கண்டித்து பா.ம.க. சார்பில் 8-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

News image
Updated On :5 அக்டோபர் 2016, 2:07 pm

DIN

சென்னை: காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்த மத்திய அரசைக் கண்டித்து பா.ம.க. சார்பில் 8-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவித்திருப்பதாவது:

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால், காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் என தமிழ்நாட்டு விவசாயிகள் மத்தியில் முளைத்திருந்த நம்பிக்கையை மத்திய அரசு கிள்ளி எறிந்திருக்கிறது.

காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு வெளியான 2007-ம் ஆண்டிலேயே மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்க வேண்டும். ஆனால், 2008-ம் ஆண்டில் கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவிருந்ததால் அப்போது வாரியம் அமைக்கப்படவில்லை. இப்போது 2018-ம் ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், அதைக் கருத்தில் கொண்டு மேலாண்மை வாரியத்திற்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது.

காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்த மத்திய அரசு, அலட்சியமாக இருந்து தமிழக உரிமைகளை பறிகொடுத்த தமிழக அரசு ஆகியவற்றைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை  உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் பா.ம.க. சார்பில் 8-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

என் தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில் பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, துணைப்பொதுச்செயலாளர் ஏ.கே. மூர்த்தி மற்றும் பல்வேறு உழவர் அமைப்புகளின் நிர்வாகிகளும் பெருமளவில் கலந்து கொள்வர்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.