சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் வஞ்சகப் போக்கை கண்டிக்கும் வகையில் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், வருகிற 15-ந்தேதி அன்று திருச்சியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அதன் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசரை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
காவிரி பிரச்சினையில் மத்திய - மாநில அரசுகளின் தவறான அணுகுமுறையால் தொடர்ந்து அநீதி இழைக் கப்பட்டு வருகிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி நீர் பிரச்சினையில் உரிமைகளுக்காக போராடி, இறுதியாக நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு பெறப்பட்டது.
இத்தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவை பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியத்தை உருவாக்கிய முறைகளை பின்பற்றி மத்திய அரசு அமைக்க வேண்டுமென்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதை நிறைவேற்ற மறுத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்த பிறகும், அதை நிறைவேற்ற முன்வராமல், கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுகிறது. இதனால் காவிரி பாசனப் பகுதிகளில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்ய முடியாமல் பல்வேறு இழப்புகளுக்கு விவசாயிகள் ஆளாகி வருகிறார்கள்.
மத்திய அரசின் வஞ்சகப் போக்கை வன்மையாக கண்டிக்கும் வகையில் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை)திருச்சியில் எனது தலைமை யில் உண்ணாவிரத அறப் போராட்டம் நடைபெற உள்ளது.
இதில் சட்டமன்ற காங்கி ரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, முன்னாள் மத்திய அமைச்சர்கள், சட்ட மன்ற காங்கிரஸ் உறுப்பினர் கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர் வாகிகள், காங்கிரஸ் முன்னணி அமைப்புகள், பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்க இருக்கிறார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய அமைப்புகளும், காவிரி பாசன பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், காங்கிரஸ் இயக்கத்தினரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2026-இல் திலியில் 7,800 தீ விபத்து அழைப்புகள் பதிவு: கடந்தாண்டை விட 20 % அதிகரிப்பு

கட்டுக்குகள் நீலகிரி காட்டுத் தீ: வனத் துறை விளக்கம்

அம்பேத்கா் பல்கலைக்கழகத்தில் 5 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம்

டாஸ்மாக் ஊழியா்கள் பெருந்திரள் முறையீடு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


