ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை: அப்பல்லோ சென்று விசாரித்த ராஜாத்தி அம்மாள்!

உடல்நலக் குறைபாடு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, திமுக தலைவர் கருணாநிதிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் சென்று சந்தித்துள்ளார்.

News image
Updated On :14 அக்டோபர் 2016, 10:10 am

DIN

சென்னை: உடல்நலக் குறைபாடு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிய, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் சென்று சந்தித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த மாதம் 22- ஆம்,தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் குறித்து கேட்டறிய, முன்னாள் முதல்வரும்,. திமுக தலைவருமான கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் வியாழன் இரவு சென்று வந்துள்ளார். இது பற்று திமுக வட்டாரங்களில்  தெரிவிக்கப்படுவதாவது:

ராஜாத்தி அம்மாள் வியாழன் இரவு 7.30 மணி அளவில் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ஜெயலலிதவின் தோழி சசிகலா நடராஜனை சந்தித்து நலம் விசாரித்தார். முதல்வர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று அவர் வாழ்த்தினார்.

இவ்வாறு திமுக வட்டாரரங்கள் தெரிவித்தன. இவரைத் தொடர்ந்து ராஜாத்தி அம்மாள் மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியும் முதல்வரை நலம் விசாரிக்க அப்பலோ மருத்துவமனைக்கு செல்லலாம் என்று கூறப்படுகிறது.  

கடந்த வாரம்தான் திமு பொருளாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.