தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு
நேற்று தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


சென்னை: நேற்று தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 30–ந்தேதி தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்து இருந்த படி, நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
கிழக்கு திசைபகுதியில் கடலில் இருந்து ஈரப்பதம் மிகுந்த காற்று, தென் இந்தியாவின் நிலப்பகுதியை நோக்கி வீசியதால் தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவிலோ, அல்லது அதை விட 10 சதவீதம் குறைவாகவே பெய்யும்.
இந்த ஆண்டு 39 செ.மீ. முதல் 44 செ.மீ. மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று நீண்ட கால வானிலை கணிப்பு தெரிவிக்கின்றது.
இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்கிடையே வங்க கடலின் மேற்கு மத்திய பகுதியில் ஆந்திர கடற்கரையையொட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது தென்மேற்கு வங்ககடல் பகுதியில் தமிழ்நாட்டையொட்டியுள்ள பகுதிவரை இருப்பதாகவும் ஐதராபாத்தில் உள்ள வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...