பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பொதுசிவில் சட்டத்திற்கு குஷ்பு ஆதரவு: வரவேற்கும் தமிழிசை!

பொது சிவில் சட்டத்தை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான  குஷ்பு ஆதரிப்பது வரவேற்கத்தக்க விஷயம் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார் .

News image
Updated On :31 அக்டோபர் 2016, 12:52 pm

DIN

சென்னை: பொது சிவில் சட்டத்தை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான  குஷ்பு ஆதரிப்பது வரவேற்கத்தக்க விஷயம் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார் .

பிரபல நடிகையும் , காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளருமான குஷ்பூ, சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் , பொது சிவில் சட்டத்தை வரவேற்கிறேன் என்னும் பொருள் பட கருத்து தெரிவித்திருந்தார்.   

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளதாவது:

பொதுசிவில் சட்டத்தை எதிர்ப்பது என்பது பெண்ணுரிமைக்கு எதிரான ஒரு செயலாகும். இதனை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குஷ்பு ஆதரிப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.  இஸ்லாமிய சமூகத்தில் பிறந்து வளர்ந்த குஷ்பு பொதுசிவில் சட்டத்தை ஆதரிப்பது நல்ல விஷயம்தான். இதை அனைவருமே வரவேற்க வேண்டும் என்பதே பாரதிய ஜனதாவின் கருத்து. .

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.