மீண்டும் சென்னை காவல்துறை ஆணையராகிறார் ஜார்ஜ்!
சென்னை காவல்துறை ஆணையராக எஸ்.ஜார்ஜ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.


சென்னை காவல்துறை ஆணையராக எஸ்.ஜார்ஜ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காவல் துறை தலைவர் (டி.ஜி.பி) பதவியில் இருந்த அசோக் குமார் நேற்று இரவு 'திடீர்' என்று விருப்ப ஓய்வில் பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து சென்னை காவல்துறை ஆணையராக இருந்த டி.கே.ராஜேந்திரன் புதிய டி.ஜி.பி யாக நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சென்னையின் புதிய காவல்துறை ஆணையர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.இந்நிலையில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய தலைவராக பணியாற்றி வந்த ஜார்ஜை காவல்துறை ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவர் முன்பே சென்னை காவல்துறை ஆணையராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...