ராம்குமார் உடற்கூறு பரிசோதனை விவகாரம்: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ராம்குமார் உடற்கூறு பரிசோதனை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் மூலம் நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்


ராம்குமார் உடற்கூறு பரிசோதனை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் மூலம் நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், சிறையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை உடற்கூறு பரிசோதனை செய்யும் போது, தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை அனுமதிக்க வேண்டும் என்று, அவரது தந்தை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகளின் அமர்வில் ஒருமித்த கருத்து ஏற்படாததால், 3வது நீதிபதியின் கருத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது
அவ்வாறு மூன்றாவது நீதிபதியாக இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் இன்று மாலை தனது தீர்ப்பை வழங்குவதாக அறிவித்தார்.
அதன்படி இன்று மாலை அவர் வழங்கிய தீர்ப்பில் ராம்குமார் உடற்கூறு பரிசோதனை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் மூலம்தான் நடத்தப்பட வேண்டும் என்றும், தனியார் மருத்துவமனை மருத்துவர் இதனை செய்யக் கூடாது என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...