வீட்டில் கைப்பற்றப்பட்டவை என்னென்ன: ராம மோகன ராவ் விளக்கம்

தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்னென்ன என்பது குறித்து வருமான வரித்துறையினர் அளித்த பஞ்சநாமாவை செய்தியாளர்கள் முன் வெளியிட்டார் ராம மோகன ராவ்.
வீட்டில் கைப்பற்றப்பட்டவை என்னென்ன: ராம மோகன ராவ் விளக்கம்


சென்னை: தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்னென்ன என்பது குறித்து வருமான வரித்துறையினர் அளித்த பஞ்சநாமாவை செய்தியாளர்கள் முன் வெளியிட்டார் ராம மோகன ராவ்.

வருமான வரித்துறை சோதனையைத் தொடர்ந்து தமிழக தலைமைச் செயலர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட ராம மோகன ராவ் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, என் வீட்டில் ரொக்கப் பணம் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய் மட்டுமே இருந்தது. அதைத் தான் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் என் மகள் மற்றும் மனைவிக்கு சொந்தமான 42 சவரன் தங்க நகைகளை வருமான வரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.

வெள்ளி என்று எடுத்துக் கொண்டால், வெள்ளி விநாயகர் சிலை உட்பட சுவாமி சிலைகள் தான் கைப்பற்றப்பட்டன.

என் மீது சந்தேகம் இருந்தால், என்னை பணியிட மாற்றம் செய்துவிட்டு என் வீட்டில் சோதனை நடத்தியிருக்க வேண்டும். தலைமைச் செயலகத்துக்குள் சோதனை நடத்த தமிழக முதல்வரிடம் அனுமதி பெறப்பட்டதா.

எனக்கு பணியிட மாறுதலுக்கான உத்தரவை வழங்க தமிழக அரசு தயங்குகிறது. சர்ச் வாரண்டுக்கான பட்டியலில் என் மகன் பெயர்தான் உள்ளது. சோதனை நடத்த மகனின் பெயரில் அனுமதி வாங்கிவிட்டு, என் வீட்டில் சோதனை நடத்தியது எப்படி என்று ராம மோகன ராவ் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com