ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சென்னை ஆர்.கே. நகர் காவல் உதவி ஆணையர்கள் மூவருக்கு காத்திருப்பு பட்டியல்: தேர்தல் ஆணையம் அதிரடி!

தேர்தல் ஆணையத்தின் உத்தரவை அடுத்து சென்னை ஆர்.கே.நகரை சேர்ந்த காவல்துறை உதவி ஆணையர்கள் மூன்று பேரை, காத்திருப்பு பட்டியலுக்கு ...

News image
Updated On :3 ஏப்ரல் 2017, 10:14 am

தினமணி

சென்னை: தேர்தல் ஆணையத்தின் உத்தரவை அடுத்து சென்னை ஆர்.கே.நகரை சேர்ந்த காவல்துறை உதவி ஆணையர்கள் மூன்று பேரை, காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே நகர் தொகுதியில் தேர்தல் ஆணையம் கடுமையான  கண்காணிப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வருகிறது. அதன் கோரிக்கையை ஏற்று முதலில்சென்னை மாநகர் காவல்துறை ஆணையராக இருந்த ஜார்ஜ் இடமாற்றம் செய்யப்பட்டார்.

அந்த வரிசையில் இன்று திருவொற்றியூர் காவல்துறை உதவி ஆணையர் குமார், ராயபுரம் பகுதி ஸ்டீபன் மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதி ஆனந்தகுமார் ஆகிய மூவரையும் காத்திருப்பு பட்டியலில் வைக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதனை ஏற்று தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் இன்று அதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.