ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: சிறப்பு தேர்தல் அதிகாரி நியமனம்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் ஒருங்கிணைப்பு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :6 ஏப்ரல் 2017, 11:31 pm

DIN

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் ஒருங்கிணைப்பு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குநராக உள்ள (செலவினங்கள்) ஐ.ஆர்.எஸ்., அதிகாரி விக்ரம் பத்ரா, இடைத்தேர்தலுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளி மாநில அதிகாரிகளின் பணியை... ஆர்.கே.நகர் தொகுதியில் தற்போது பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளின் பணியை இந்திய தேர்தல் ஆணையத்துடன் ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைப்பு அதிகாரியாக விக்ரம் பத்ரா செயல்படுவார்.
பணப்பட்டுவாடா -தொடர் புகார்: ஒரு கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு அதிகளவு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக திமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார்கள் தெரிவித்தன. அனைவரும் அடுத்தடுத்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை புதன்கிழமை சந்தித்து மனு அளித்தனர். இந்த நிலையில் ஒருங்கிணைப்பு சிறப்பு
அதிகாரியாக விக்ரம் பத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
பொறுப்பேற்பு: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒருங்கிணைப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள விக்ரம் பத்ரா, தனது பொறுப்புகளை ஏற்பதற்காக வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு தலைமைச் செயலகம் வந்தார். அவரை தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வரவேற்றார். அங்கு சுமார் அரை மணிநேரம் இருவரும் ஆலோசனை நடத்தினர்.
தில்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளுடன் இருவரும் விடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினர். ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு, எண்ணிக்கை முடிவடையும் வரையில் ஒருங்கிணைப்பு சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா சென்னையில் தங்கியிருப்பார்.
சட்டம்-ஒழுங்கு விவகாரம்: தலைமைச் செயலாளர் முக்கிய ஆலோசனை
சென்னை, ஏப். 6: சட்டம்-ஒழுங்கு குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (ஏப்.6) முக்கிய ஆலோசனை நடத்தினார்.
தமிழக காவல் துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர ஆணையாளர் (தேர்தல் பணி) கரண் சின்கா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
புதன்கிழமை அதிகாலை வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா நடந்ததாக தகவல்கள் வெளியாகின. புகார்கள் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
இந்நிலையில், சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து காவல் துறை இயக்குநர், சென்னை மாநகர ஆணையாளர் உள்ளிட்டோரிடம் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இடைத் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குப் பதிவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.