காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தமிழகத்திற்கு புது ஆளுனர் வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

தமிழகத்திற்கு தற்போதுள்ள பொறுப்பு ஆளுநருக்கு பதிலாக புது ஆளுனர் நியமிக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஏப்ரல் 2017, 9:55 am

DIN

சென்னை: தமிழகத்திற்கு தற்போதுள்ள பொறுப்பு ஆளுநருக்கு பதிலாக புது ஆளுனர் நியமிக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் அன்பழகன். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு தமிழகத்தின் ஆளுநராக இருந்த ரோசய்யா நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக மஹாராஷ்டிரா மாநில ஆளுநராக உள்ள வித்யாசாகர் ராவ்  தமிழகத்திற்கு பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். பொறுப்பு  ஆளுநராக உள்ள அவரால் முழுமையாக பணியாற்ற முடியவில்லை. எனவே அவருக்குப் பதிலாக குறிப்பிட்ட அவகாசத்தில் ஒரு முழுநேர ஆளுநரை நியமிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று தனது மனுவில் கூறியிருந்தார்.  

இந்த மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.