ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அரசு நூலகங்களின் தரத்தை மேம்படுத்த புதிய உத்திகள்: பொது நூலகத் துறை இயக்குநர் தகவல்

தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்களின் தரத்தை மேம்படுத்த புதிய உத்திகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொது நூலகத் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

Updated On :7 ஏப்ரல் 2017, 8:58 pm

தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்களின் தரத்தை மேம்படுத்த புதிய உத்திகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொது நூலகத் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
இதுகுறித்து பொது நூலகத் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தினமணிக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
பொது நூலக இயக்ககத்தின்கீழ் தமிழகத்தில் தற்போது 32 மாவட்ட மைய நூலகங்கள், 1,926 கிளை நூலகங்கள், 1,821 ஊர்ப்புற நூலகங்கள் என மொத்தம் 3,779 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர 14 நடமாடும் நூலகங்களையும், 780 பகுதிநேர நூலகங்களையும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் 153 நூலகங்கள் உள்ளன. கடந்த 2016-2017 -ஆம் நிதியாண்டில் 93 புதிய நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
விழிப்புணர்வு ஏற்படுத்தி... வரும் கல்வியாண்டில் நூலகங்களின் தரத்தை மேம்படுத்தவும், வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் புதிய உத்திகள் மேற்கொள்ளப்படும். நூலகங்களை இளம் வயது முதல் பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் மொழித்திறன் அறிவு, தகவல் தொடர்பு, பேச்சாற்றல் போன்றவை வளர்ச்சியடையும்.
நூலகத்துடன் பள்ளிகளை இணைக்கும் முயற்சியாக ஒவ்வொரு நூலக அலுவலரும் தங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களை நேரடியாகச் சந்தித்து நூலகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவர். அப்போது நூலகம் என்றால் என்ன, அதன் முக்கியத்துவம், இடம்பெற்றிருக்கும் நூல்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்படும். தேவைப்படும்பட்சத்தில் நூலகத்தின் சார்பில் 50 நூல்கள் வரை பள்ளிகளுக்கு மொத்தமாக வழங்கப்படும்.
வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த...பொதுமக்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தவும், கூடுதல் உறுப்பினர்களைச் சேர்க்கவும் தீவிர முயற்சி எடுத்து வருகிறோம். இளைஞர்களின் கற்பனைத்திறனையும், அறிவாற்றலையும், சிந்திக்கும் திறனையும் வளர்க்கும் வகையில் நிகழாண்டில் கதை, கட்டுரைகளைத் தவிர்த்து அறிவியல் -ஆராய்ச்சி, மொழிபெயர்ப்பு தொடர்பான நூல்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கல்வியாண்டு முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான சிறந்த நூல்கள் அனைத்து நூலகங்களிலும் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
நூல்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பிறகு...தற்போது சென்னையில் வரலாறு, கண்டுபிடிப்பு, இலக்கியம், அரசியல் உள்பட பல்வேறு தலைப்புகளில் உள்ள அரிய நூல்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணி முடிவடைந்ததும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நூல்கள் மாவட்ட மைய நூலகங்களுக்கு அனுப்பப்படும். அதேபோன்று முக்கிய இடங்களில் உள்ள அரசு நூலகங்களில் இணைய நூல்கள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உலக புத்தக தினத்தை (ஏப்.23) முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களில் நடத்தப்படும் கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம் போட்டிகளில் மாணவர்களை திரளாக பங்கேற்கச் செய்யவும், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை சிறப்பு விருந்தினராக அழைக்கவும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தனி நபரையும் நூலகத்தை நோக்கி திரும்பச் செய்வதே பொது நூலகத் துறையின் நோக்கமாகும் என்றார் அவர்.


'செய்தித்தாள்கள் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை'
அரசு நூலகங்களில் செய்தித்தாள்களின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என பொது நூலகத் துறை இயக்குநர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'நிகழாண்டு ஏப்ரல் 1 -ஆம் தேதி முதல் அரசு நூலகங்களில் தமிழில் ஒன்று, ஆங்கிலத்தில் ஒன்று என இரண்டு செய்தித்தாள் மட்டுமே இடம்பெறும் என தவறான தகவல் பரப்பப்பட்டது.
இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம். கடந்த நிதியாண்டில் இடம்பெற்ற பிரதான செய்தித்தாள்கள் நிகழாண்டிலும் இடம்பெறும். இதுகுறித்து கடந்த சில நாள்களுக்கு முன்பு அனைத்து மாவட்ட நூலகர்களையும் சென்னைக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினோம். இதுவரை எந்த நூலகத்திலும் செய்தித்தாள்கள், வாரம், மாத இதழ்களின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.