மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

நடிகர் சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

சமத்துவமக்கள் தலைவரும் நடிகருமான சரத்துகுமார் இல்லத்தில் இன்று காலை 8.30 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக

News image
Updated On :7 ஏப்ரல் 2017, 5:01 am

DIN

சென்னை: சமத்துவமக்கள் தலைவரும் நடிகருமான சரத்துகுமார் இல்லத்தில் இன்று காலை 8.30 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

சரத்குமாரின் கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு, சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் நேற்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இன்று அவரது இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை வீடு, புதுக்கோட்டை வீடு, கல்லூரிகள் என 30 மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பான புகார் வந்ததையடுத்து இந்த திடீர் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.