எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: சிலையுடன் நினைவுச்சின்னம்
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சென்னையில் வரும் ஜூன் 8, 9 ஆகிய இரு நாள்கள் கொண்டாடப்படும்.


மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சென்னையில் வரும் ஜூன் 8, 9 ஆகிய இரு நாள்கள் கொண்டாடப்படும். அதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று முன்னாள் முதல்வரும் அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) அணியின் தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வரும் ஜூன் 8, 9-ஆம் தேதிகளில் சென்னையில் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி எம்.ஜி.ஆரின் புகழ் குறித்து கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், அவரது சாதனையை விளக்கும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழாவில் எம்.ஜி.ஆருடன் இணைந்து பணியாற்றிய அரசியல் தலைவர்கள், திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் கௌரவிக்கப்படுவர். எம்.ஜி.ஆருடன் பணியாற்றிய நலிந்த கலைஞர்களுக்கு பொற்கிழி வழங்கப்படும். அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும் வகையில் கணினிவழிக் கண்காட்சி உருவாக்கப்படும். தமிழ்நாடு நுண்கலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர். பெயரில் திரைப்படக் கலை ஆய்வு இருக்கை ஏற்படுத்தப்படுவதுடன், நூற்றாண்டு மலரும் வெளியிடப்படும். மேலும் எம்.ஜி.ஆரின் பிரமாண்ட சிலையுடன் நினைவுச்சின்னம் உருவாக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...