சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பி.எஸ் அணியினர் மீண்டும் கட்சியில் இணைவதை அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வரவேற்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவது குறித்து நிபந்தனை அற்ற பேச்சுவார்த்தைக்கு தயராக இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியதை அடுத்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை அவரது அடையார் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற மாற்று அணியினர் மீண்டும் கட்சியில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தினோம். அதே போல் கட்சியினை வலுப்படுத்துவது குறித்தும் பல்வேறு வழிகள் ஆலோசிக்கப்பட்டது.
அதிமுகவின் சின்னமான இரட்டைஇலையை மீட்க வேண்டும் என்பதே கட்சியினர் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவது குறித்து பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துக்கள் தினகரனிடம் எடுத்துரைக்கப்பட்டது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பி.எஸ் அணியினர் மீண்டும் கட்சியில் இணைவதை அதிமுக துணை பொதுச் செயலாளரான தினகரன் வரவேற்கிறார். இதை தான் முன்பே வலியுறுத்தியுள்ளதை அவர் குறிப்பிட்டார்.
எனவே பேச்சு வார்தை நடத்துவதற்கான குழுக்கள் விரைவில் உருவாக்கப்படும். அதே போல சின்னம் மீட்ப்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடன் தாக்கல் செய்ய வேண்டிய பிரமானப்பத்திரம் பற்றியும் ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


