அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு: டி.டி.வி.தினகரன் மனு 'திடீர்' வாபஸ்!
அமலாக்கத்துறை தொடர்ந்த அந்நிய செலாவணி மோசடி வழக்கில் தான் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மனுவை ...


சென்னை: அமலாக்கத்துறை தொடர்ந்த அந்நிய செலாவணி மோசடி வழக்கில் தான் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மனுவை அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் திடீரென்று வாபஸ் பெற்றுள்ளார்.
அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மீது அமலாக்கத்துறை கடந்த 1994-ஆம் ஆண்டு அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு வழக்குகள் தொடர்ந்தது. அந்த வழக்கில் இருந்து தினகரனை விடுவித்து எழும்பூர் பெருநகர நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அத்துடன் வழக்கு விசாரணையை தினமும் நடத்த வேண்டும் என்றும் எழும்பூர் பெருநகர நீதிமன்றதிற்கு உத்தரவு பிறப்பித்தது.
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து விடுவித்து எழும்பூர் பெருநகர நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னரும், மீண்டும் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள உத்தரவிட்டதை எதிர்த்து மனு ஒன்றையும் தினகரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததா என்பதற்கான ஆவணங்களை கடந்த 13-ஆம் தேதியன்று சமர்ப்பிக்குமாறு தினகரன் தரப்பிற்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் தினகரன் ஆஜரானார். அதே நேரம் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் தான் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தினகரன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...