ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சுழலும் சிவப்பு விளக்கை அகற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது காரிலிருந்து சுழலும் சிவப்பு விளக்கை அகற்றினார். 

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:20 pm

DIN

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது காரிலிருந்து சுழலும் சிவப்பு விளக்கை அகற்றினார். 

குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட மிகவும் முக்கிய பிரமுகர்களின் (விவிஐபிக்கள்) வாகனங்களில் வரும் மே மாதம் 1-ஆம் தேதி முதல் சிவப்பு நிற சுழல் விளக்குகள் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது காரிலிருந்து சுழலும் சிவப்பு விளக்கை தானே அகற்றினார். மத்திய அரசின் முடிவை தொடர்ந்து சுழலும் விளக்கை அகற்றியதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், அமைச்சர்களும் சுழலும் சிவப்பு விளக்கை அகற்றுவார்கள். குடிமராமத்து பணிகளுக்காக 300 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். 

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் போன்ற அவசரகால மற்றும் நிவாரண சேவை வாகனங்கள் தவிர்த்து, பிற வாகனங்களில் சிவப்பு நிற சுழல் விளக்குகளை பயன்படுத்துவதற்கு மே மாதம் 1-ஆம் தேதி முதல் தடை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.