கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருவாரூரில் மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது

திருவாரூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :25 ஏப்ரல் 2017, 5:22 am

DIN

திருவாரூர்: திருவாரூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநிலம் தழுவிய அளவில் இன்று செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், திருவாரூரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

இந்நிலையில், மாவட்ட பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஸ்டாலின் அங்கு திருமண மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவருடன் திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன், டி.ஆர்.பாலு, சட்டப்பேரவை உறுப்பினர் மன்னை டி.ஆர்.பி. ராஜா, குடவாசல் பேரூர் திமுக செயலாளர் முருகேசன், ஒன்றியச் செயலாளர்கள் ஜோதிராமன், பிரபாகரன், கலியபெருமாள், பாலச்சந்திரன் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.