பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

விவசாயிகள் பிரச்னைக்காகவே திமுகவுடன் அணி சேர்ந்தோம்

விவசாயிகள் பிரச்னைக்காகவே திமுகவுடன் அணி சேர்ந்தோம் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன்.

News image
Updated On :27 ஏப்ரல் 2017, 11:35 pm

DIN

விவசாயிகள் பிரச்னைக்காகவே திமுகவுடன் அணி சேர்ந்தோம் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன்.
புதுகையில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக மின்வெட்டு அதிகரித்து வருகிறது. இதை உடனடியாக தமிழக அரசு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காகவே திமுகவுடன் முழு அடைப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டோம். தேர்தல் வரும் போது திமுகவுடன் கூட்டணி சேர்வது குறித்து பரிசீலனை செய்வோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.