மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

'நீட்' தேர்வு மாணவர் அனுமதி விவகாரம்: சி.பி.எஸ்.இ இயக்குனருக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

தொழில் நுட்ப கோளாறால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தாமதமான மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் ...

News image
Updated On :27 ஏப்ரல் 2017, 7:26 am

DIN

சென்னை: தொழில் நுட்ப கோளாறால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தாமதமான மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாவிடில், நீதிமன்றத்தில் ஆஜாராகும்படி உத்தரவிட நேரும் என்று சி.பி.எஸ்.இ இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான சேர்க்கையானது ;நீட்' எனப்படும் தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் மூலமே நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் இந்த தேர்வுகளை மத்திய கல்வி வாரியமான சி .பி.எஸ்.இ நடத்தும் என்றும் அறிவித்தது. 

அதன் அடிப்படையில் தேர்வுக்கான நடைமுறைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலமாகத்தான் விண்ணப்பிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் சி.பி.எஸ்.இ தளத்தின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வுக்கு சரியான நேரத்தில் விண்ணப்பிக்க இயலவில்லையென்றும்,.இதன் காரணமாக தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எனவே தாமதமாக விண்ணப்படித்த தங்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் 38 மாணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களை நேற்று கேட்டநீதிபதி புஷ்பா இன்று தனது உத்தரவை பிறப்பித்தார். அதில் தொழில் நுட்ப கோளாறால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தாமதமான மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நிறைவேற்றாவிடில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜாராகும்படி உத்தரவிட நேரும் என்றும் சி.பி.எஸ்.இ இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.