மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜெயலலிதா கொடநாடு காவலாளி கொலை: கொலையாளி கேரளாவில் கைது

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை தொடர்பாக கேரளாவில் ஒருவர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி

News image
Updated On :28 ஏப்ரல் 2017, 5:55 am

DIN

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை தொடர்பாக கேரளாவில் ஒருவர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாகப் பணியாற்றி வந்த ஓம் பகதூர் (50) கடந்த திங்கள்கிழமை படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்தார். இந்நிலையில், கொலையாளிகளைப் பிடிக்க 5 டிஎஸ்பிக்கள் தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த அன்று அதிகாலை நேரத்தில் கொடநாடு பகுதியில் சுற்றிவந்த சொகுசு வாகனங்கள் குறித்து கோத்தகிரி டானிங்டன், குஞ்சப்பனை சோதனைச் சாவடி ஆகிய இடங்களில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் அப்பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையப் பணியாளர்களிடம் சொகுசு வாகனங்களின் படக்காட்சிகள் காண்பிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், கோவை, ஈரோடு, மேட்டுப்பாளையம் காவல் துறையினரின் ஒத்துழைப்போடும் குற்றவாளிகளைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காயமடைந்த மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரை குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெளியானது.

இந்நிலையில், கேராளாவைச் சேர்ந்த ஒருவரை தனிப்படையினர் இன்று கைது செய்துள்ளனர். அவரிடம் போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அளக்கரை அருகே உள்ள ஒரு சொகுசு பங்களாவில், கொள்ளை குறித்து திட்டம் தீட்டியதாகவும், கொடநாடு எஸ்டேட் பங்களா அருகே பதுங்கி இருந்து பல நாட்கள் உளவு பார்த்ததாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் அவரிடம் ஆவணங்கள், நகைகளை எடுத்துச் செல்ல கொள்ளை நடத்தப்பட்டதா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.