காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ராகுல் காந்தி மீதான தாக்குதலைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸார் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்: புதுவையில் 100 பேர் கைது

ராகுல் காந்தி மீதான தாக்குதலைக் கண்டித்து புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் வாயில் கருப்புத் துணி கட்டி கடற்கரை காந்தி சிலைஅருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

News image
Updated On :5 ஆகஸ்ட் 2017, 7:46 am

தினமணி

ராகுல் காந்தி மீதான தாக்குதலைக் கண்டித்து புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் வாயில் கருப்புத் துணி கட்டி கடற்கரை காந்தி சிலை
அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.

குஜராத் மாநில மக்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற துணை தலைவர் ராகுல்காந்தி மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினர்.

இதற்காக மத்திய மோடி அரசு மற்றும் குஜராத் மாநில பாஜக அரசைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் கடற்கரை சாலை மகாத்மா காந்தி சிலை அருகே வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்
நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் எம்.இளையராஜா தலைமை தாங்கினார்.

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மத்திய மாவட்ட மாநில தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் மகளிர் காங்கிரஸ், சேவாதள காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், மற்றும் அனைத்து பிரிவு காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் உள்பட நூற்றுக்கு மேற்பட்டோர் வாயில கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 100-க்கு மேற்பட்டோரை போலீஸôர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.